சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தற்போது சீரியலில் கலக்கி வரும் நடிகைகள் யார் தெரியுமா..?

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது எப்படி உள்ளார்கள் பற்றி இதில் காண்போம்.

1.ரவீனா:

   

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌனராகம் சீசன் 2′ சீரியல்’ சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரவீனா இவர் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா மற்றும் ராட்சசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2.நேகா மேனன்:

‘வாணி ராணி’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நேகா மேனன். இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

3.நிவாஸ்னி ஷ்யாம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நிவாஸ்னி ஷ்யாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடித்துள்ளார்.

4.ரக்ஷா ஷ்யாம்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷா ஷ்யாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜே’பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5. நீலீமா ராணி:

கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவன் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நீலீமா ராணி. அதன் பிறகு இவர் பல சீரியல்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

6.கேப்ரியலா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை கேப்ரியலா சார்ல்டன்.இவர் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

7.ஸ்ரீதேவி அசோக் குமார்:

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுக்கோட்டை சரவணன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் குமார். இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

8.அஸ்ரிதா ஸ்ரீதாஸ்:

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.