குடும்பத்துடன் ஜாலியாக vacation சென்றுள்ள நடிகை ராதிகா சரகுமார்… இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் வீடியோ …

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

 

   

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேயான் என்ற ஒரு மகள் உள்ளார்.இவர் 2016ல் பெங்களூர் செய்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ரேயான். இவர் தற்பொழுது தனது அம்மா நடிகை ராதிகா, அப்பா நடிகர் சரத்குமார் மற்றும் தனது குடும்பத்துடன் இணைந்து ஜாலியாக சுற்றுலா சென்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பகிந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rayane R Mithun (@rayanemithun)