மாடர்ன் உடையில் லண்டன் வீதிகளில் மகளுடன் சுற்றித் திரியும் நடிகை சத்யப்ரியா… வெளியான கியூட் புகைப்படங்கள்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் குடும்பத்தில் பெண்களை அடக்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களின் கதையை தோல் உரித்து காட்டுகிறது.

மேலும் இந்த சீரியலில் குடும்பத்து பெண்கள் அவர்களை எதிர்த்து போராடியும் வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில்  முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது.

கோலங்கள் என்ற சூப்பர் ஹாட் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார்.

மக்களுக்கு தகுந்தவாறு கதையில் பல நல்ல திருப்பங்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர். தற்பொழுது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சத்யபிரியா. தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.  இவர் எஸ்.எஸ்.முகுந்தா என்னும் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சத்யபிரியா. இவர் தற்பொழுது லண்டனில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். லண்டனில் மாடர்ன் உடையில் எடுத்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.