மகள் மற்றும் தோழிகளுடன் லண்டன் சென்ற 90s நடிகை சத்யபிரியா… வெளியான புகைப்படங்கள்..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

   

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் நடிப்பவர்தான் நடிகை சத்திய பிரியா. இவரின் குடும்பம் பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார்.

அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 50 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் இப்போது எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் மருமகள் வெளிநாட்டை சேர்ந்தவர் என ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ள நிலையில் சமீபத்தில் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியானது.

இந்நிலையில் சத்யபிரியா தனது மகள் மற்றும் தோழிகளுடன் லண்டன் சென்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.