சமந்தாவுக்கே டஃப் கொடுத்த சாயிஷா….! பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு செம குத்தாட்டம்….. சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?…!!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு அவர்கள் சிறுவயதிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.  மேலும் நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் மாநாடு படம் மூலமாக ரி என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கச் செய்தார். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படமும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பத்து தல என்ற படத்தில் நடிகர் சிம்பு அவர்கள் நடித்து வந்துள்ளார்.

   

இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் இதில் கௌதம் கார்த்திக்,  பிரியா பவானி சங்கர்,  கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற திரைப்பட முன்னணி பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்,  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் பத்துதல படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் வனமகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மற்றும் நடிகர் ஆர்யா அவர்களின் மனைவியுமான சாயிஷா அவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அவர் தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து சிறிது விலகி இருந்தார்.  தற்போது பத்து தல படத்தில்  கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.  இந்நிலையில் இதில் சாயிஷா அவர்களின் சம்பளம் ரூபாய் 40 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.