கேக் வெட்டி என்ஜாய் பண்ண எதிர்நீச்சல் குணசேகரனுக்கு.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அவரே பகிர்ந்த வீடியோ..!

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் திருச்செல்வம்  இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

   

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த தொடரில் பெரிய அதிர்ச்சியாய் மாரிமுத்து மரணம் இருந்து, எல்லோருக்கும் பெரும் துக்கத்தை கொடுத்தது.

இந்நிலையில் இந்த சீரியலில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் என்ற வில்லன்  கதாபாத்திரத்திற்கு, வேல ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரபல நடிகரும், எழுத்தாளரும் ஆவார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அதை எதிர்நீச்சல் சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடி வேல ராமமூர்த்திக்கு மாலை போட்டும் கௌரவப்படுத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இப்படி சந்தோஷத்தில் இருந்த போது, எனக்கு அதிர்ச்சியான செய்தியும் வந்ததாக ராம மூர்த்தி கூறினார். அதாவது எனது பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்த சிலர் ரசிகர்களிடம் பண மோசடியும் செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த மாதிரி மோசடியில் ஈடுபடுவர்களுக்கு, என்ன செய்ய வேண்டுமோ அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

எனவே மக்கள் யாரும் இதை நம்பி ஏமார்ந்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோ இதோ,