துரோகத்தால் திரையுலகை தூக்கி எறிந்த நடிகர்கள்.. யார் யார்லானு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் தன்னை மதிக்காத காரணத்தால் உதறி தள்ளிவிட்டு வேறு தொழிலுக்கு சென்ற மூன்று நடிகர்கள் குறித்து பார்க்கலாம். அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் கார்த்திக், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

   

எனினும் அவர் கஷ்டப்பட்டு நடித்த சில முக்கிய காட்சிகளை திரைப்படத்தில் வைக்காமல் விட்டதாலும், தன்னை மதிக்காமல் அவமதித்ததாலும் திரையுலகே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். அடுத்ததாக நடிகை ஹீரா, ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அஜித்துடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

பல பத்திரிகைகளில் அவர்கள் காதலிப்பதாக செய்திகள் வெளி வந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடிகர் அஜித், ஷாலினியை காதலித்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவர் தன்னை ஏமாற்றுகிறார் என்று உணர்ந்து மனம் நொந்து போன ஹீரா திரை உலகை விட்டு மொத்தமாக விலகிவிட்டார்.

அடுத்ததாக 90-களில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் அப்பாஸ், திரை பிரபலங்கள் விளையாடும் சிசிஎல் தொடரில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நடிகர்களையும் முதல் முறையாக ஒன்று சேர்த்து விளையாட வைத்தார். ஆனால், அதற்கான பாராட்டுக்கள் அவருக்கு கிடைக்கவில்லை. நடிகர் விஷால் இடையில் நுழைந்ததால், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த அவர், அனைத்தையும் விட்டுவிட்டு திரையுலகை விட்டு ஒதுங்கி விட்டார்.