அப்பவே.. ஃபர்ஸ்ட் நைட் பாடலை பக்காவா எழுதி.. சிக்னல் கொடுத்த கண்ணதாசன்..!!

1950 களில் புலவராகவும், பாடலாசிரியராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். இவர் தமிழில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு அரசாங்கம் சாகித்ய அகாடெமி விருது கொடுத்து கவுரவித்துள்ளது. கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.

   

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். மனிதனின் அத்தனை உணர்வுகளையும் தனது பாடலில் காட்டிய கவியரசர் கண்ணதாசன்,  இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுடன் இணைந்து முதலிரவுக்கான பாடலை எழுதி உள்ளார். அதில் அவர் வைத்த கோட்வேர்டும் தெரியவந்துள்ளது.

Idhaya Kamalam - 01 January 1965 Movie Songs Download

1965-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளியான படம் இதயக் கமலம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் ‘’மலர்கள் நனைந்தது பனியாலே’’ என்ற பாடல், முதலிரவுக்கான பாடலாக அமைந்து, தாம்பத்தியம் குறித்து கவியரசர் கண்ணதாசன், மறைமுகமாகவும், அது எளிதில் புரியும் வகையிலும் வரிகளை அமைத்திருப்பார்.

மேலும் சிவாஜி கணேசன் சாப்பில் 1973 ல் வெளியான படம் எங்க தங்க ராசா. இந்த படத்தில் வரும் ‘’இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்ற பாடலிலும், கண்ணதாசன், தனக்கே உரிதான கோட்வேடுடன் முதலிரவு பாடலை அற்புதமாக எழுதியிருப்பார். அதில் குறிப்பாக இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை என்ற வரிகளை குறிப்பிடலாம். இவ்வாறு இந்த இரு பாடல்களில், காமத்தை கண்ணதாசன் சிறப்பாக மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

Tamil Old Songs,Sivaji : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை! - iravukkum pagalukkum video song from enghkall thanghka raajaa - Samayam Tamil