‘கலக்கப்போவது யாரு’ TSK வின் மொத்த குடும்பத்தையும் பாத்துருக்கீங்களா?… இவுங்கள எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘கலக்கப்போவது யாரு’. இந்தநிகழ்ச்சிக்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது என்றே கூறலாம். காமெடிக்கு பிரபலமான இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்  பிரபலமானவர் TSK. அதாவது டிஎஸ்கே என்கிற திருச்சி சரவண குமார்.

   

இவர் தற்பொழுது சின்ன திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் டிஎஸ்கேவும் அசாரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையில்  மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

கலக்கப்போவது யாரு சீசன் 8 டைட்டிலை வென்றுள்ள இவர் தற்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகின்றார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் tsk. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவரின் தங்கையான சங்கீதா தனது அண்ணன் , அண்ணி , அம்மா என மொத்த குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ அழகான குடும்பம்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….