இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?… மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு… வெளியான புகைப்படங்கள்..

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.

   

இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே சமயம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 17 கோடி வசூல் செய்துள்ளது.

இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்பட வெற்றியை இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து இந்த திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.