தனது இரண்டாவது மனைவியுடன் 53 வயதில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ‘வாரிசு பட’ தயாரிப்பாளர் … வெளியான அழகிய புகைப்படங்கள்…..

தெலுங்கு திரைத்துறையில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தில் ராஜு. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் நித்தின் நடிப்பில் வெளியான தில் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.

   

இதைத்தொடர்ந்து  தற்போது ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் தில் ராஜு அவர்களின் 49 வயதில் அவரது முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இதனை அடுத்து அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். அதன்படி மகளின் வற்புறுத்தல் காரணமாக  நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் 2020 ஆம் ஆண்டு தில் ராஜு வைக்கியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் அவரது மகள் மற்றும் பேத்தி முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு அன்வி ரெட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய 53 வது வயதில் இரண்டாவது மனைவியுடன் மகனின் முதல் பிறந்த நாளை தில் ராஜு கொண்டாடிய  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நிலையில்  வைரலாகி வருகிறது.