மீண்டும் வருகிறார்.. ஒரு நாள் முதல்வர்.. இயக்குனர் ஷங்கரின் மாஸ் பிளான்..!

இயக்குனர் சங்கர் என்றாலே அவரின் திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஒரு பாடலுக்காகவே வெளிநாடுகளில் பல கோடிகளை வாரி இறைத்து விடுவார். எனவே, பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில், ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி காதலன், பாய்ஸ், முதல்வன், நண்பன், சிவாஜி, அந்நியன், எந்திரன் இந்தியன் உட்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

   

சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் வருடத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்து விளையாட முதல்வன் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் கலக்கியிருப்பார். அத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என்று அனைத்துமே தற்போது வரை ரசிகர்களால் விரும்பப்படுகிறது. இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் முதல்வன் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்களில் முதல்வன் மிக முக்கியமான திரைப்படம். அத்திரைப்படத்தை இந்தியில் அணில் கபூரை வைத்து நாயக் என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்திருந்தார். இந்நிலையில், நாயக் 2 திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.