திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும் குறையாத ரொமான்ஸ்… விக்னேஷ் சிவன் நயன்தாரா வைரல் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.

   

அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா.

தொடர்ந்து தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது என்று கூறலாம்.

ஆனால் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகையின் நயன்தாரா பிசினஸிலும் கலக்கி வருகின்றார். நடிகை நயன்தாரா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ..