‘உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணருகிறேன்’…  பிரம்மாண்ட வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த செய்தி வாசிப்பாளர் கண்மணி… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் இதோ…

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் தற்பொழுது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி.

   

இவர் ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து நியூஸ் 18, காவிரி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது சன் டிவியில் பணியாற்றி வருகிறார்.

இவர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்துள்ளார்.

தமிழில் இவர் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்தை தொடர்த்தும் இவர் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து கொண்டு தான் வருகிறார்.

சமீபத்தில் இவர் தன் கர்ப்பமாக இருக்கும் தகவலை க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்தார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூற தொடங்கினர். தற்பொழுது இவரின் வளைகாப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

அழகான பட்டுப் புடவையில் தனதுகணவருடன் எடுத்துக் கொண்ட ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இத்தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படங்களை பதிவு செய்து அவர், ‘உன் சிறு அணைப்பில்  ஓராயிரம் ஆறுதல் உணருகிறேன்’ என்று தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக பதிவு செய்துள்ளார்.