துணிக்கடையில் அலப்பறை பண்ணும் பிரீத்தி சஞ்சீவ்… உங்க அலப்பறை தாங்க முடியலப்பா… வீடியோவை நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப காதலத்தில் விஜய்யுடன் இணைந்து ஒருசில படங்களில் துணை நடிகராக தனது நடிப்பை தொடங்கினார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் தொடர் மூலம் முழுநேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.

   

அதனை அடுத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்த நடிகர் சஞ்சீவ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி தொடரில் நடித்துவந்தார். தற்போது அந்த தொடரில் இருந்து விலகி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில்  பிசியாக  நடித்துவருகிறார் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். தற்பொழுது ப்ரீத்தி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார்.பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி.

தற்போது இவர் சென்னை, தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது ப்ரீத்தி சஞ்சீவ் ஷாப்பிங் செய்த போது புடவை கலெக்சன், மேக்கப் பொருட்கள், ஆபரணங்கள் என அனைத்தையும் பார்த்து அசந்து போய் உள்ளார். தற்போது இவரின் இந்த  ஷாப்பிங் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…