லோகேஷ் படத்தில் நடிக்கும் லாரன்ஸ்.. கதையை கேட்டால் ஷாக் ஆயிருவீங்க.. வெளிவந்த மஜா தகவல்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனர்களில் மிக முக்கியமானவராகவும் பிரபலமானவராகவும் திகழ்ந்து வருகிறார். அவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் தனி மதிப்பும் இருந்து வருகிறது. இதனிடையே அவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் இரண்டாம் பகுதி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அதற்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நண்பரும், உதவி இயக்குனருமான ரத்னகுமார் அத்திரைப்படத்தின் கதையில் தலையிட்டு தான் என்று தகவல் பரவியது. இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ரத்தினவேல், இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தான் என்று வலைபேச்சு சக்திவேல் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, ரத்தினவேல், ராகவா லாரன்ஸ் இருவருக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு இருந்தது. அதாவது ரஜினிகாந்த் குறித்து தவறாக ரத்தினவேல் பேசியதாக கூறப்பட்டது. அது ராகவா லாரன்ஸிற்கு பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது.

இந்நிலையில், லோகேஷ் கதகராஜ் தலையிட்டு இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டார். எனவே, இந்த திரைப்படம் தொடங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் திரைக்கதை எழுதி தயாரிக்கிறார். ரத்தினவேல் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படம் பேய் படம் என்று சக்திவேல் கூறியிருக்கிறார்.