‘அண்ணாமலை’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரீ கொடுத்து கலக்கியவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி. முதல் சீரியலே அவருக்கு நல்ல ரீச் கொடுக்க அடுத்தடுத்து வெற்றிகரமான தொடர்கள் நடித்து வந்தார். வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி என தொடர்கள் நடித்த ஸ்வேதாவிற்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உண்டு.
கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார். பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் தனது மகனுடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அசத்தும் ஸ்வேதா மறுபக்கம் சீரியலிலும் கலக்கி வந்தார். ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தனது திருமணம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவரது கணவர் கூறியதாவது, ‘திருமணத்திற்கு முன்னரே தங்களுக்கு மகன் பிறந்து விட்டதாகவும், மூத்த மகனை வைத்துக் கொண்டுதான் தங்களது திருமணம் நடந்ததாகவும்’ மேலும் பல சுவாரசியமான தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….
View this post on Instagram