பெற்றோருக்கு பெருமை சேர்த்த சூர்யா – ஜோதிகா பிள்ளைகள்.. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

   

இவர்கள் இருவருமே தற்போது மும்பையில் படித்து வருகின்றனர். இதில் சூர்யாவின் மகளான தியா, படிப்பில் சிறந்து விளங்கி வருபவர் என்பது, அவரது 10ம் வகுப்பு மதிப்பெண் மூலம் தெரிய வந்தது.

 

இந்நிலையில் ஜோதிகாவின் மகள் மற்றும் மகன் இருவரும் தங்கள் பள்ளியில் sports day முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, மெடல்களையும் கோப்பைகளையும் தட்டி தூக்கி உள்ளதாக நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போது தனது மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு, அதில் தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு ‘உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை’ என கூறியுள்ளார் இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகை ஜோதிகா. வீடியோ இதோ,