மங்குனிகளா…? ரஜினி கூட நடிச்சது தப்பாடா… வடிவுக்கரசியை மன்னிப்பு கேட்க வைத்த வேதனை சம்பவம்…!

ரசிகர்கள் பலரும் தாங்கள் விரும்பும் கதாநாயகர்களை தெய்வமாக பார்ப்பதுண்டு. அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் திரைப்படம் பார்க்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் தாங்கள் தலைவராக நினைக்கும் கதாநாயகனை திரைப்படத்தில் யாரேனும் திட்டினாலோ, அடித்தாலோ, நிஜ வாழ்க்கையில் அவர்களை தாக்க நினைக்கும்  அளவிற்கு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை திட்டியதற்காக அவரின் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்த சம்பவங்கள் நடந்தன. அதேபோல் அருணாச்சலம் திரைப்படத்தில் நடித்த வடிவுக்கரசிக்கும் நடந்திருக்கிறது.

   

ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, அருணாச்சலம் திரைப்படத்தில் நான் ரஜினிகாந்தை, “அனாத பயலே” என்று திட்டி இருப்பேன். அந்த படத்திற்காக அவர்கள் கொடுத்த டயலாக் அது. அதன் பிறகு திரைப்படம் வெளிவந்து விட்டது. சில நாட்கள் கழித்து நான் என் அம்மாவோடு கொடைக்கானல் சென்றிருந்தேன்.

ரயிலில் ஏறி அமர்ந்த போது டிடிஆர் என்னிடம் வந்து வெளியே ஒரே பிரச்சினையாக இருக்கிறது. ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார். நீங்கள் வந்து மன்னிப்பு கேட்டால் தான் நிலைமை சரியாகும். அதன்பின்பு தான் ரயிலை எடுக்க முடியும் என்கிறார். எனக்கு எதுவுமே புரியவில்லை.

நான் திரைப்படம் ரிலீஸ் ஆனது மற்றும் அதில் நான் ரஜினியை திட்டியது என்று எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை. நான் எதுக்கு சார் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று பயந்தேன். அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரஜினி ரசிகர்களை திட்டி தீர்த்துவருகிறார்கள்.