தெலுங்கு நடிகர் ராம் சரணை கௌரவப்படுத்திய சென்னை வேல்ஸ் நிறுவனம்… டாக்டர் பட்டம் வழங்கிய வைரல் புகைப்படங்கள்…!!!

தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று அடையாளத்துடன் அறிமுகமானாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் ராம்சரண்.

   

பல திரைப்படங்களில் நடித்த ராம்சரனுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சங்கர் இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் கேம் சேஞ்சர்.

இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார் ஷங்கர். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இப்பல்கலைக்கழகத்தின் வேந்தரும் சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் விருந்தினராக தெலுங்கு திரையரங்கின் முன்னணி நடிகர் ராம்சரண் கலந்து கொண்டார்.

இவரின் திரைபயணத்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலர் தலைவர் டிஜி சீதாராம் வழங்கினார்.

 

 

 

மேலும் பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் சங்கர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் ராம்சரனுக்கு பட்டம் வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…