‘அன்பே சிவம்’படத்தால தான் என் பொண்ணுக்கு ஸ்கூல்ல சீட்டே கிடைத்து இயக்குனர்| Sundar C..

தமிழ் சினிமா மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் சுந்தர் சி இவர் முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வெற்றி, ரெண்டு, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு ,போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ‘ஒன்று 2 ஒன்று’, வல்லன் என்ற இரண்டு படங்களில்  நடித்து வருகிறார்.

   

இவர் இயக்குனர் மட்டுமல்ல எழுத்தாளர், நடிகர். தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் தனியார் you tube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தொகுப்பாளர் ‘அன்பே சிவம்’ படத்தை பற்றி கேட்க, அதற்கு சுந்தர் சி  இந்தப் படம் வெளியான பிறகு கமர்சியலா இந்த படம் பெருசா வொர்க் ஆகல ஆனா இந்த படத்தால நல்லது நடக்கும்னு கமல் சார் சொன்னாரு இந்த படத்தால எப்பவுமே எனக்கு நல்லது தான் நடந்திருக்கு.

 

 

இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷத்துல  என் என் மகளுக்கு ஒரு பெரிய ஸ்கூல்ல சீட்டு கேக்கறதுக்காக  போன போது  அவங்க சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.  அட்மிஷன்  ஆபீஸர் principal மீட் பண்ணுங்க என்று கூறினார். நான் இருந்துகிட்டு அதான் சீட்டே தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க வா வீட்டுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்தேன். அவர் வாங்க போய் பார்ப்போம் என்று principal  ரூம்ல உட்கார்ந்து இருந்தோம். அவங்களோட ஐடியா ஏதோ யாரும் செலிபிரிட்டி வந்திருக்காங்க ரெண்டு நிமிஷம் பேசிட்டு அனுப்பிச்சி விடலாம்.

 

என்ன பேசுறதுன்னு தெரியாம இருக்கிறப்ப அவங்க சினிமா பத்தி பேச ஆரம்பிச்சாங்க அப்பொழுது  ஹிந்தி படம் மிஸ்டர்அண்ட் மிஸஸ் ஐயர் வெளிவந்துச்சு இந்த மாதிரி சவுத் இந்தியால ஏன் படம் பண்றது இல்ல, இந்த மாதிரி ஒரு சில படம் தான் இருக்கு.ரீசண்டா ஒரு படம் பார்த்தேன் அந்த  படம் சூப்பரா இருந்துச்சு அந்த படம்  ‘அன்பே சிவம்’என்று principle கூற, உடனே என் மனைவி  மேம் இவர் தான் அன்பே சிவம்  பட இயக்குனர் என்று கூறினார்.உடனே அன்பே  சிவம் பட இயக்குனர் மகனுக்கு சீட்டு இல்லையா என்று கூறி பள்ளியில் சீட் கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.