‘அன்னை உள்ளம்’ இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் அப்பு குட்டி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தன் நடிகர் அப்பு குட்டி. இவர் இவர் உண்மையான பெயர் சிவ பாலன். இவர் சில திரை  பிரமுகர்களால் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்.

   

அதன் பின் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் மதராசபட்டினம், குள்ளநரி கூட்டம், வீரம், பாயும் புலி, முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இறுதியாக நடித்த படம் மார்கழி திங்கள் இந்நிலையில் நேற்று இவர் தனது பிறந்த நாளை சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள’அன்னை உள்ளம்’ என்ற ஆதரவற்ற இல்லத்தில் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அங்குள்ள முதியவர்களுக்கு உணவும், அவர்களின் மருத்துவ செலவுக்கும் உதவித்தொகை வழங்கி , அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது .