குக் வித் கோமாளி பவித்ராவிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களிடையே ஆச்சரியத்தினை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும்.

ஏனெனில் சமையல் நிகழ்ச்சியில் மக்களுக்கு அருமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இருந்தது. கடந்த சீசனில் ரம்யாவைப் போன்று இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிகமாக இடம்பிடித்தது பவித்ரா.

   

இவர் அடிப்படையில் டான்சராகவும், குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு தற்போது கதாநாயகியாக மாற்றியுள்ளது.

அந்த வகையில் ஏற்கெனவே, காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கும் இவர், அதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் கதிருக்கு ஜோடியாக, பவித்ரா நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்க உள்ளதாகவும், காதல் படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.