`நம் பாரம்பரிய கலைக்கு நிகர் உலகில் எதுவுமில்லை.! சரவெடி பறையடி.! அழகிய தமிழ் பெண்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பறையாட்டம்

அருமையாக தப்பாட்டம் ஆடும் தப்பாட்ட கலைஞர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கிராமத்து கலைகளில் ஒன்று தப்பாட்டம். பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும்.

பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.

ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது.

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள். கலைஞர்கள் சிலர் தப்பாட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த கலைஞர்களை இணையவாசிகள் பலரும் பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நீங்களும் அந்த வீடியோவை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *