எவ்வளவு பெரிய மழையாலும் என்ன அசைக்க முடியாது…. புத்திசாலித்தனமாக யோசித்த வாகன ஓட்டி…. வைரலாகும் வீடியோ…!!!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. வங்க கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவு வருகின்றது. இந்த காரணத்தை தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம் புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

   

இதனால் வரும் 14-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிக கன மழை பெய்யும் என்றும், ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புகள் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை பெய்தால் போதும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று வெள்ளைக்காடாக காட்சியளிக்கும். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம். அதிலும் இருசக்கர வாகனங்களில் சைலன்சர் பகுதியில் தண்ணீர் புகுந்து விட்டால் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

இதனால் புத்திசாலித்தனமாக யோசித்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சைலன்சர் பகுதியில் டியூப் போன்ற ஒன்றை கட்டி அதனை வாகனத்தின் மேல் பகுதியில் கட்டி விடுகிறார். இப்போது அந்த வாகனத்தின் சைலன்சர் பகுதியில் இருந்து வெளியாகும் புகையானது அந்த டியூப் வழியாக மேலே சென்று புகையாக வெளி வருகின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. இதை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by DINESH (@jd_kille)