20 ஆண்டுகளாக வடிவேலுவுடன் இணைந்து நடிக்காத நடிகர் அஜித்… வடிவேலு கூறிய அந்த ஒரு வார்த்தை தான் காரணமா?… தீயாய் பரவும் தகவல் உள்ளே…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்பொழுது பிரபலங்களை பற்றிய ஏதாவது ஒரு சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் அஜித் குறித்த தகவல் ஊன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.

இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்துள்ளது. அந்த வகையில் 2002ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘ராஜா’.  இப்படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன.

இத்திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் வடிவேலு இதுவரை இணைந்து நடிக்கவே இல்லை.இதற்கு காரணம் ‘ராஜா’ படத்தின் போது நடந்த மோதல் தான் என கூறப்படுகிறது. ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் மாமாவாக நடித்திருப்பார் வடிவேலு, அந்த கேரக்டருக்கு ஏற்ப அவர் அஜித்தை அப்படம் முழுக்க வாடா போடா என்று தான் அழைப்பார். ஷூட்டிங் முடிந்த பின்னும் அதே பாணியில் வாடா போடா என வடிவேலு அழைத்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  இயக்குநரிடம் இதுபற்றி கூறியுள்ளார் நடிகர் அஜித். இயக்குநர் இதனை வடிவேலுவிடம் கூற, அவர் இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் அஜித்தை அவ்வாறே அழைத்து வந்திருக்கிறார்.

இதையடுத்து அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் குறைத்துக் கொண்டாராம் நடிகர் அஜித். அப்பொழுது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த பிரச்சனை தான் 20 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்காததற்கு காரணமாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.