போச்சு… எல்லா பக்கமும் ஆப்பு… கார்த்தி மேல புகார் கொடுப்பேன்… கஞ்சா கருப்பு ஆவேசம்…!

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும், அதன் பிறகு அவர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, அண்ணன் அமீர், சசிகுமார் போன்றவர்களுடன் நான் இருப்பதால் தான் சூர்யா மற்றும் கார்த்தி திரைப்படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ஜப்பான் திரைப்படத்தில், என்னை போல இருக்கும் ஒருவரை நடிக்க வைத்துள்ளனர். அது முறைகெட்ட செயல். நான் நினைத்தால் புகார் அளிக்க முடியும். என் பெயரை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.