இளம் நடிகையுடன் குத்தாட்டம் போடும் நடிகர் சிவகார்த்திகேயன்…இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் வெள்ளித்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுக்கு ஒருவராக தற்போது வலம் வருகிறார் .இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. தற்போது இவர் அமரன் மற்றும் எஸ் கே 23 என்ற இரண்டு படங்களின் நடித்து வருகிறார்.

   

இயக்குனர் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சமீபத்தில்  இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் நடித்துவரும் அமரன் மற்றும் எஸ் கே 23 ஆக இருந்து திரைப்படங்களும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீப ஒரு நிகழ்ச்சியை நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர் .இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை  ஸ்ரீலீலா. ஸ்ரீலீலா உடன்மேடையில்  ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.