தனது ரசிகனின் இல்லத்திற்கு சர்ப்ரைஸாக ஆட்டோவில் சென்று… தாயாரின் உடல் நிலையை விசாரித்த நடிகர் சூரி… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சூரி. இவர் நடித்த திரைப்படங்களில் இவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். குறிப்பாக வெண்ணிலா கபாடிக் குழு திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பரோட்டா காமெடியை கூறலாம். தற்பொழுது காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாக களம் இறங்கி புது அத்தியாயத்தை தொடங்கி வருகின்றனர்.

   

அந்த வகையில் நடிகர் சந்தானத்தை தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூரி ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விரைவில் ரிலீசாக உள்ளது. விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி கொட்டுக்காளி  என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி தனது ரசிகரின் தாயாரின் உடல் நிலையை விசாரிக்க ஆட்டோவில் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இவர் மதுரையில் உள்ள தனது ரசிகரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக சர்ப்ரைஸாக ஆட்டோவில் சென்று உடல்நிலை விசாரித்துள்ளார். சர்ப்ரைஸ் ஆக வந்த நடிகர் சூரியை பார்த்த அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….