இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… அட இவரா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா செட்டி. அருந்ததி, ருத்ரமா தேவி போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவர் மங்களூரை சார்ந்தவர். இவரின் மரபு துளுவ மரபு ஆகும். ஆரம்பத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றியவர் நடிகை அனுஷ்கா.

   

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இன்னும் கொஞ்ச காலம் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்த்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அனுஷ்கா.அவர் நடித்த படத்தின் பெயர் சொன்னால் மக்கள் மத்தியில் இவர் நடித்த கதாபாத்திரம் ஞாபகம் வரும் .அந்த அளவிற்கு தன்னுடைய திறமையை தனது திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும்  தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர். ஹீரோ இல்லாமல் பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மாஸ் ஆக நடித்தார் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார் . இதன்மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறினார். ஆனால் இடையில் அவர் கொஞ்சம் உடல் எடை கூடவே தனது பட வாய்ப்புகளை இழந்து தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளார். சமீப காலமாகவே இணையத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படங்களை பகிர்ந்த இவர்கள் யார்? என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை அனுஷ்காவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை அனுஷ்காவா இது? சிறுவயதிலேயே எவ்வளவு க்யூட்டா இருக்காங்க?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் புகைப்படம்….