உயிரோடு இருக்கும் பொழுதே தனக்காக கல்லறை கட்டிய நடிகை ரேகா… இது தான் காரணமா?… தீயாய் பரவும் தகவல் உள்ளே…

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கானா என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது வெள்ளித்திரை சின்னத்திரை என பிசியாக வலம் வந்து கொண்டு வருகிறார் நடிகை ரேகா. இந்நிலையில் நடிகை ரேகாவை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இவர் தன் தந்தை மீது கொண்ட பாசம் காரணமாக இருந்த பின்னரும் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக தனது தந்தையின் சமாதிக்கு அருகிலேயே அவருக்கும் சமாதி கட்டி பராமரித்து வருகிறாராம். உயிரோடு இருக்கும் பொழுதே ரேகா செய்த இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது  இத்தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டும் வருகிறது.