தனது pre பிறந்தநாளை குடும்பத்தோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்… எவ்ளோ அழகான குடும்பம்… வைரலாகும் வீடியோ… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நாயகி, வில்லி என தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

   

இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்கார், இரவின் நிழல் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார் வரலட்சுமி. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

நடிகை வரலட்சுமி என்றாலே அவர் நடித்த வில்லிகதாபாத்திரம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். இவர் நடித்த சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். சினிமாவில் நுழைந்த பொழுது இவர் கொஞ்சம் குண்டாக இருந்தார். தற்பொழுது அதிகம் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் சமீபத்தில் வைரலானது.

இறுதியாக இவரது நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின, வரும் மார்ச் 10ம் தேதி ‘கொன்றால் பாவம்’ என்ற திரைப்படமும் இவரது நடிப்பில் வெளியாக இருக்கிறது. இவர் நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர்.இந்நிலையில் சரத்குமார் பிரபல தமிழ் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாக்ராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் தற்பொழுது, தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றைபதிவு செய்துள்ளார். அதாவது நாளை மார்ச் 5 அவரது பிறந்தநாள், எனவே தனது மொத்த குடும்பத்துடன் Pre பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பொதுவாக நடிகர் சரத்குமாரின் குடும்பத்தில் என்ன விசேஷம் என்றாலும், மொத்த குடும்பமும் ஒன்றாகி விடுவார்கள்.அதேபோல் வரலட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது மொத்த குடும்பமும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by RADHZ😚 (@mysweetie_radhuma)