விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் சிவின்… இந்த சீரியலா?… அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ஜனவரி 22 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களாக அசீம் , விக்ரமன், சிவின் என 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

   

இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். விஜய் டிவியின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். விக்ரமன், ஷிவின் இருவரில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறலாம்.

தற்பொழுது விக்ரமனுக்கும் சிவினுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஆதரவு ஏற்பட்டு வருகிறது . இதைத்தொடர்ந்து பிக் பாஸ் பிரபலமான சிவின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிக்க இருக்கிறாராம். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரதி கண்ணம்மா என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

இதோ அந்த புகைப்படம்….