தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம்’ வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இத்திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு மற்றும் பலர் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.தற்பொழுது பல நூறு கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்து வருகிறது வாரிசு திரைப்படம். இந்நிலையில் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டதால் குடும்ப ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்தது.
இந்நிலையில் ‘கில்லி’ படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இருவரும் மோதிக்கொண்டனர். இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது இத்திரைப்படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை பிரைம் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பிரகாஷ்ராஜின் ஆபீசுக்கு வந்த விஜய் கபடி ஆடியுள்ளார். இந்த காட்சி பார்ப்பதற்கு கில்லி படத்தை ஞாபகப்படுத்துவது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வாரிசு திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த காட்சியை தற்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தற்போது விஜய் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து, சமீபத்தில் சென்னை திரும்பினார் நடிகர் விஜய். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வைரலாகும் அந்த ப்ரைம் வீடியோ இதோ…