ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க வந்த தனுஷ்…வைரலாகும் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் தனுஷ், இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது திரைப்பட நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர் பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களில்ல் உள்ளார்.

   

இவர் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதனை அடுத்து திருடா திருடி, சுள்ளான் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலமாக இவர் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்றார். அதேபோல் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார். மேலும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரிக்கிறார்.

இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரணை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.  இந்நிலையில்  இவர் 2004 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

மேலும் இவர் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் 2013 ஆம் ஆண்டு ரஞ்சனா என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் முதன் முதலில் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.  இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இவர் சினிமாவைப் போல் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் அடிக்கடி கலந்து கொள்வார். அவ்வகையில் நேற்று சென்னை சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெர்சஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்‌‌‌ஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த விளையாட்டை நேரில் காண பட திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் சென்றிருந்தனர்.

அதாவது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் என பலர் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவராக நடிகர் தனுஷும்  விளையாட்டை  காண நேரில் சென்றுள்ளார்.  அங்கிருந்து அவர்  இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.