நடிகர் நாகசைதன்யா முன்னணி தமிழ் நடிகரின் மகளை காதலித்தாரா?… அட இவர்தானா?… தீயாய் பரவும் புகைப்படம் இதோ…

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்று அடையாளத்தோடு வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் நாகசைதன்யா. இவர் தனது திறமையின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

   

இதை தொடர்ந்து திருமணம் முடிந்த சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகை சமந்தா தற்பொழுது மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் எந்த காரணத்திற்காக இவ்வாறு விவாகரத்து பெற்றனர் என்பது இதுவரை வெளிப்படையாக வெளியாகவில்லை.

விவாகரத்து பெற்ற இருவரும் தங்களது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை ஒருவருடன் காதலில் இருந்தார் என்ற செய்தி பல வருடங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

அதாவது நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னணி நடிகர்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனுடன் காதலில் இருந்தார் என்றும் இருவரும்  தங்களுக்குள் சமரசமாக பிரிந்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இதோ அவர்களின் புகைப்படம்….