மறைந்த முதலமைச்சர் எம் ஜி ஆரின் கேரள மற்றும் இலங்கையில் உள்ள பூர்வீக வீட்டை பாத்துருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இதோ…

”திருடாதே பாப்பா திருடாதே” என்று குழந்தைகளுக்கு பாடம் எடுத்தவர், ”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர், ”நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்று இளைஞர்களுக்கு உற்சாகமூட்டியவர், அவர் வேறு யாரும் இல்லை மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் தான்.

   

இவர் நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கினார். எம்ஜிஆர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் தமிழ் சமூகத்தில் இவரது புகழ் இன்னும் குறையவே இல்லை. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் இன்னும் இயற்பெயரைக் கொண்டவர் எம்ஜிஆர்.

இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார். 1936-ல் வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இதை தொடர்ந்து அரசியலிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இவர் பாரத ரத்னா விருதுக்கும் சொந்தக்காரர். இவர் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலப்பட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர்.

எம்ஜிஆரின் பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் உள்ளது. தற்பொழுது கேரள அரசு அவருடைய வீட்டை சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளது. அங்கு எம்ஜிஆரின் அம்மா அப்பாவின் அழகான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கேரள மற்றும் இலங்கையில் உள்ள பூர்வீக வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.