திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா… என்ன ஆச்சு உங்களுக்கு?… பதற்றத்தில் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவது வழக்கம். விஜே பிரியங்கா, டிடி, ஜாக்லின் என இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்பொழுது தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

   

இவரின் காமெடியும் எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரியங்கா.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது பெயர் சற்று டேமேஜ்  ஆகியது. ஆனால் மீண்டும் தொகுப்பாளராக களம் இறங்கி தனது ரசிகர்களை மீண்டும் கவர்ந்து விட்டார் பிரியங்கா. தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் food poison தான் எனக் கூறப்படுகின்றது.

இதனை பிரியங்கா தானே தனது சமூக வலைத்தள பங்கங்களின் மூலமாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில மணி நேரங்களில் அந்த பதிவை உடனே டெலிட் செய்து விட்டார். மேலும் பிரியங்காவிற்கு இப்படி அடிக்கடி food poison ஆகிறது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

இதற்கு முக்கிய காரணமே இவரது உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள பிரச்சினை தான். இதனைத் தொடர்ந்து இவர் சீக்கிரம் விரைவில் உடல்நலம் பெற வேண்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.