இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து பிரிய….. காரணம் என்னவென்று தெரியுமா?…. இன்றுவரை பேசாததற்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா?….!!!

தமிழ் சினிமாவில் பல இசை ஜாம்பவான்கள் இருக்கும் நிலையில் அதில் இவரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்,  அவர்தான் மக்களால் இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா, இவர் தமிழில் அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம்  1976 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.

   

இதுவரை இவர் 1000க்கு மேற்பட்ட தமிழ்,  தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு 2010ல்  உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

மேலும் இவருக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 2018ல் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அவருடன் பல பாடகர் பாடகிகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

ஆனால் அவர்களுடன் ஏதாவது சில பிரச்சனையை ஏற்படுத்தி அந்த நட்பை பாழாக்கி கொள்வது இளையராஜாவின் ஒரு வழக்கமாக இருந்தது, இந்நிலையில் அப்படி இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் இளையராஜா சில வரிகளை மாற்ற வைரமுத்துவிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு வைரமுத்து மாற்ற முடியாது என்று ஸ்ட்ரிட்டாக கூறியதின் விளைவாக இருவரின் கூட்டணியும் பிரிய காரணமாக அமைந்து விட்டது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து பணியாற்றாமல் பகைவர்களாகவே இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட உண்மையான சண்டை என்ன என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஊடகம் ஒன்று இளையராஜாவை ஒரு தொடர் எழுதும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் தனக்கு நேரமில்லை என்று கூறி நண்பர் வைரமுத்துவை எழுத சொல்லி இருக்கிறார். ஆனால் இது பற்றி எதையும் வெளியில் கூறக்கூடாது என்று வைரமுத்துவிடம்  இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பின் தொடரும் வெளியானது,  இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும்போது அந்த தொடரை நான் தான் எழுதினேன் என்று தெரிவித்துவிட்டார். இதனால் கடுப்பாகி கோபப்பட்டதால் இருவரும் இன்றுவரை பிரிய காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.