பிரசவ வயிற்றுடன் கியூட்டான வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி… லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இதனிடையே காயத்ரி யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவது முறையாக தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

அந்தச் செய்தியை அவர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி யுவராஜ் தற்போது க்யூட்டான லூக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)