பழம்பெரும் நடிகை மரணம்…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்…..

பிரபல தெலுங்கு நடிகையான ஜமுனா உடல் நலக்குறைவால் தற்பொழுது மரணம் அடைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ,கன்னடம், இந்தி என ஏராளமான மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜமுனா. இவர் தமிழில் தங்க மலை ரகசியம், நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மனிதன் மாறவில்லை ,மருதநாட்டு வீரன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

கர்நாடக மாநிலத்தில் 1936 இல் பிறந்த இவர், நடிப்புத்துறையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு வயதிலிருந்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இவர் முதல் முதலாக 1952 இல் வெளியான தெலுங்கில் வெளியான ‘புட்டிலு ‘ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிய இவர் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு செலுத்தினார். 1980ல் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜமுனா. இவர் 1989 நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து 1990 இல் பாஜகவில் இணைந்தார் நடிகை ஜமுனா. இவர் தற்பொழுது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 86 வயதில் இன்று மரணம் அடைந்துள்ளார். இவரது இறப்பு செய்தியை கேட்ட ரசிகர்களும் திரையுலகினர்களும்  தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.