‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகாவா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே… புகைப்படம் இதோ…

நடிகை ஸ்ருதிகா தனது திருமண புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் தமிழ் சினிமாவில் ஸ்ரீ, ஆல்பம், நள தமயந்தி, திக்குதே என ஒரு சில திரைப்படங்களிலும், மலையாளத்தில் ஒரு திரைப்படமும் நடித்துள்ளார்.

   

இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு சில படங்களே  அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறலாம். இதை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். தற்பொழுது இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், தனது புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார் .இவரின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று திருமண நாளை கொண்டாடியுள்ளார் நடிகை ஸ்ருதிகா. எனவே அவர் தனது  திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு தங்களது திருமண நாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Shrutika Arjun (@shrutika_arjun)