பிளைட்ல இதான் ஃபர்ஸ்ட் டைமா?….. அதான் இப்படி….. இளைஞர் செய்த வேடிக்கையான சம்பவம்….. வைரலாகும் வீடியோ….!!!

ஒரு நபர் முதன்முறையாக ஏர்போர்ட்-க்கு சென்றுள்ளார் போல அவர் தெரியாமல் பையை ஸ்கேனிங்கில் வைக்கும் இடத்தில் இவரும் சேர்ந்து சென்றுள்ள வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் மக்கள் விமானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்வதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் . அதிலும் விமானத்தில் சென்றால் மிகக் குறைந்த நேரம் ஆகும் என்பதால் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு பெரும்பாலான பணக்காரர்கள் இதனை பயன்படுத்துவார்கள்.

   

ஆனால் சாதாரண மக்களுக்கு ஒரு முறையாவது விமானத்தில் சென்று வர வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் விமான நிலையத்திற்குள் சென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படி முதன்முறையாக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு நபர் செய்த வேடிக்கையான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த நபர் பையை ஸ்கேனிங்கில் வைக்கும் இடத்திற்கு செல்கிறார். அந்த இடத்தில் பையை வைப்பதற்கு பதிலாக பையுடன் சேர்ந்து இவரும் அதில் அமர்ந்து உள்ளே சென்று வெளியே வருகிறார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்..