உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய நடிகர் அஜித்… செம மாஸா இருக்கே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.

   

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘தல 62’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திரைப்படம் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை இணையத்தில் வெளியாகவில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நடிகர் அஜித் அடுத்த திரைப்படத்தில் கூட்டணி அமைப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இது நடக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் நடிக்க இருப்பதாகவும் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. தற்பொழுது நடிகர் அஜித் தனது வெளியூர் பயணத்தை முடித்து சென்னை திரும்பி உள்ளார்.

அப்பொழுது அவரை நேரில் சந்தித்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இப்புகைப்படத்தை பார்த்த தல அஜித்தின் ரசிகர்கள் ‘நடிகர் அஜித் சற்று உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்க்கு மாறி உள்ளதாக’ கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் ஸ்லிம் லுக் புகைப்படம்….