தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்தின் ‘வீரம்’ பட நடிகர்… மருத்துவமனைக்கு விரையும் பிரபலங்கள்… 

2003 இல் வெளியான ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாலா. ‘தவமின்றி கிடைத்த வரமே’ பாடலாலும், வடிவேலுவின் காமெடியாலும் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.  இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது .

   

அன்பு படத்தை தொடர்ந்து தமிழில் இவர் காதல் கிசுகி,சு கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. இதை தொடர்ந்து 2006 இல் வெளியான கலாபம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

தற்பொழுது இவர் அதிகம் மலையாள திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்ணன் சிவா இயக்கிய ‘வீரம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் நடிகர் பாலா. இவர் 2010 இல் அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2019ல் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து 2021ல் எலிசபெத் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா. ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்தும் அசத்தியுள்ளார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்பொழுது பாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரைக் காண திரைப்பிரபலங்கள் சென்ற வண்ணம் உள்ளனர். அவரது அண்ணனான சிறுத்தை சிவாவும் தற்பொழுது கொச்சின் சென்று உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.