மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா… என்னாச்சு உங்களுக்கு?… பதறும் ரசிகர்கள்…. வைரலாகும் புகைப்படம் இதோ…

பிரபல காமெடி நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியவர் மனோபாலா. இவர்  சில திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். நடிகர் மனோபாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா, நாகேஷ், அஜித், விஜய் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் காமெடிக்கென்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது.

   

இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமான உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று என்று கூறலாம். சமீபத்தில் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்கும் மனோபாலாவை நடிகர் சங்க தலைவர் பூச்சி  முருகன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஆச்சு உங்களுக்கு?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விரைவில் அவர் நலம் பெற வேண்டி தங்களின் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.