லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் பிரபல நடிகர் ராகுல் தேவ் மனைவியை பார்த்து உள்ளீர்களா?… புகைப்படம் உள்ளே…

தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் நடிகர்  ராகுல் தேவ். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நரசிம்மா’ படத்தின்  மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர். செப்டம்பர் 27தேதி  1968 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதல் முதலில் ‘சாம்பியன்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்ல மாடலும் கூட.  இந்தி, தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் மராத்தி ,பெங்காலி ,போஜ்புரி, குஜராத் ,பஞ்சாபி, ஒடியாவிலும், பல படங்கள் நடித்துள்ளார்.

இவரது தந்தை காவல் உதவி ஆணையர் ஹரி தேவ்.  இவர்  தமிழில் பரசுராமன், முனி ,அரசாங்கம் 10 எண்றதுக்குள்ள, ஜெய்ஹிந்த், வேதாளம் ,படங்களில் நடித்துள்ளார்.

இவர் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு   டிவி  சீரியலில் அறிமுகமானார்.இதில்  தேவன் கே தேவ்…மஹாதேவ் என்ற புராண தொலைக்காட்சி தொடரில் அரக்கனாக   நடித்தார்.

அதன் பின் இந்தி பிக் பாஸ்  சீசன் 10 பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிலிருந்து  63வது நாளில் வெளியேற்றப்பட்டார்.

இவர் 2018 இல் போஜ்புரி திரைப்படமான துல்ஹன் சாஹி பாகிஸ்தான் சே 2 இல் நடித்தார் . நடிகர் தேவ்  ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார்.ரீனா புற்றுநோயால்  16 மே 2009 அன்று  இறந்தார். மனைவி மறைந்தபின் பல வருடங்களாக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்தார்.

நடிகர் ராகுல்தேவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த முக்தா கோட்சே என்ற நடிகை காதலித்து வருகிறார்.

முக்தா தமிழில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.