தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகளின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் சரத்குமார்… நடிகை வரலக்ஷ்மியா இது?… ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது ‘வாரிசு’ திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தையாக நடித்து அசத்தியுள்ளார்.

   

மேலும் ,பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். இவர்களில் வரலக்ஷ்மி சரத்குமார் தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகில் வலம்  கொண்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்குப்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2 என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ‘வீர நரசிம்ம ரெட்டி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு, அவருடைய தந்தை சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவில் தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், தன் மகள் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் அவருடைய சிறு வயது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை வலக்ஷ்மியா இது? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த ட்விட்டர்  பதிவு…