நடிகர் சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற பிரபல காதல் ஜோடி… அப்படின்னா அது உண்மைதானா?… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…

நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற நடிகர் சித்தார்த்  மற்றும் அதித்தியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

   

இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதியை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி இருவருமே இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் திரையுலகில் அறிமுகமானார்கள். நடிகை அதிதி ராவ் இயக்குனர் மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதேபோல நடிகர் சித்தார்த் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்பொழுது இவர்கள் நடிகர் சர்வானந்த்தின்] நிச்சயதார்த்தத்திற்கு ஜோடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘தங்களது காதலை வெளி உலகத்துக்கு சொல்லத்தான் இப்படி ஜோடியாக அனைத்து நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…