இந்த காலத்தில் இரவு நேரங்களில் தொலைக்காட்சி சீரியல் பார்க்காத ஆளே இருக்க முடியாது.அந்த அளவிற்கு சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
அப்படி இரவு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்’.
இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்பத்தின் கதையாகும் இதில் அண்ணன் தம்பி நான்கு பேர் வாழ்க்கையை பற்றி கதையாகும் .
‘ பாண்டியன் ஸ்டோரில்’ இரண்டாவது அண்ணனாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் நடிகர் வெங்கட்.
இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனி. இவர் முதலில் டிவியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஓடிக் கொண்டிருந்த’கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலமாக நடிப்பில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து புகுந்த வீடு, ஆவணம் ,தெய்வம் தந்த வீடு ,அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு ,நினைக்கத் தெரிந்த மனமே, என பல சேனல்களில் சீரியலில் நடித்துள்ளார்.
இவர் பல சீரியல்களின் நடித்திருந்தாலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலமாக மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தற்போது ஜீவா என்று சொன்னால் தெரியாத ஆளே கிடையாது. அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையால் மக்களை கவர்ந்து உள்ளார்.
இவர் தன்னுடன் படித்த அஜித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகான மகளும் உள்ளார்.
தற்போது இவர்களின் குடும்பப் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.